தெற்காசிய பிராந்தியத்தில் கூடுதலான கேள்வியுடைய தரவுப் பரிமாற்ற மையமாக இலங்கைக்குரிய இடத்தை மேம்படுத்தி ஸ்ரீ லங்கா டெலிக்கொம் பிஎல்சி நிறுவனத்தினால் மாத்தறை பிரதேசத்தில் நிறுவப்பட்ட SEA-ME-WE5 கடலடி கேபிள் பரிமாற்ற மையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (02) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
48Tbps வேகமுடைய பூகோள Bandwidth பரப்பை இலங்கைக்கு உரித்தாக்கி, தென்கிழக்காசிய, மத்திய கிழக்கு மற்றும் மேற்கைரோப்பியாவைச் சேர்ந்த 17 நாடுகளின் தொலைத் தொடர்பாடல் நிறுவனங்கள் பலவற்றின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கடலடி தரவுப் பரிமாற்ற மையம் இலங்கையை பொருளாதார டிஜிட்டல் யுகத்தை நோக்கி கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தில் சர்வதேச சேவை வழங்கலை வினைத்திறனாக்குவதற்காக அமுல்படுத்தப்படும் விசேட திட்டமாகும்.
கடலடி தரவுப் பரிமாற்ற மையத்தை ஜனாதிபதி டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக காலியிலிருந்து ஆரம்பித்து வைத்து காலியில் நிறுவப்பட்டுள்ள கேபிள் டிப்போவுக்கான அடிக்கல் நாட்டலையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொண்டார்.