குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளது.
இவ்வாறான தாக்குதல்களை தடுத்து நிறுத்த கூட்டு முயற்சி மிகவும் அவசியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என அமெரக்காவிற்கான இலங்கைத் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.