குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெர்மனிய அதிபர் தேர்தலில் மீளவும் வெற்றியீட்டியுள்ள அஞ்சலா மோர்கல் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். மோர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் ( Christian Democratic Union ) கட்சியின் சகோதர கட்சியான பதான் சகோதரி கட்சி ( ( Bavarian sister party ) யுடன் கூட்டணி அமைப்பது குறித்து சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
கூட்டணி அமைப்பதற்கு முன்னதாக குடிவரவு, ஓய்வூதியம் மற்றும் சுகாதாரம் போன்ற விடயங்கள் குறித்து சில இணக்கப்பாடுகள் எட்டப்பட வேண்டியிருப்பதாக பதான் சகோதரி கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கூட்டணி அமைப்பது தொடர்பில் சில கட்சிகள் வைத்து வரும் நிபந்தனையை அதிபர் மோர்கல் நிராகரித்து வருகின்றார்.
இதன் காரணமாக ஆட்சி அமைப்பதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.