குவைத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 22 இந்தியர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகம் அல்லது நுகர்வு, திருட்டு, வழிப்பறி மற்றும் மோசடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்காக இவர்கள் இவ்வாறு சிளையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் அந்நாட்டு இளவரசர், 15 இந்தியர்களின் மரண தண்டனையை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆயுள் தண்டனையாகக் குறைத்ததுடன் மேலும் 119 இந்தியர்களின் சிறை தண்டனை காலத்தைக் குறைக்கவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இளவரசரின் உத்தரவுப்படி 22 இந்தியர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்க்பபட்டுள்ளது.