178
கடந்த ஏழாண்டுகளாக கிளிநொச்சி நகரத்தில் பேரூந்து நிலையத்திற்கான கட்டடங்கள் இல்லாத நிலையில் மரங்களின் கீழும், வீதியோரங்களில் நின்றும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். கடந்த ஒன்பது மாதங்களாக புதிய இடத்தில் பேரூந்து நிலையம் இயங்கத் தொடங்கி கட்டடப் பணிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. இக்கட்டடப் பணிகளும் எப்போது முடிவடையப் போகின்றதோ தெரியாது. நாம் தற்போதும் மரங்களுக்குக் கீழே நின்றுதான் பயணிக்கின்றோம். எனத் தெரிவிக்கும் பொது மக்கள்
குறித்த தற்போது பேரூந்து நிலையத்தில் கழிவறை வசதிகள் கிடையாது. இதன் காரணமாக பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம். சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் மலசல கூடங்கள் இல்லாததன் காரணமாக அவலத்தினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது எனப் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
கரைச்சி பிரதேச சபையினர் குறித்த பேரூந்து நிலையப் பகுதியில் தற்காலிக மலசல கூடங்களையாவது அமைத்திருக்க வேண்டும். அது நடைபெறவில்லை. இதன் காரணமாக குறித்த பேரூந்து நிலையத்தில் உள்ளூர், வெளியூர்களுக்கு பயணிக்கும் பயணிகள் பெருமளவானோர் நெருக்கடிகளுடன் பயணிக்க வேண்டியுள்ளது. குறித்தபேரூந்து நிலையப் பகுதியில் நீர் வசதி, மலசல கூட வசதிகளை உருவாக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதேவேளை குறித்த புதிய பேரூந்து நிலைய அமைக்கும் பணியின் போது விபரங்கள் அடங்கிய விளம்பர பலகை காட்சிப்படுத்தப்படடிருக்க வேண்டும் ஆதாவது ஒப்பந்தகாலம், பணிக்கான மொத்த நிதி, திட்டத்தின் விபரங்கள் என்பன காட்சிப்படுத்திபட்டிருக்க வேண்டும் ஆனால் அவை இதுவரை இடம்பெறவில்ல மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அவை நிறைவேற்றப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது
Spread the love