161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்திற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை மூடுவது தீர்வுத் திட்டமாக அமையாது என டொக்டர் ஹர்ச டி சில்வாவின் தலைமையிலான ஜனாதிபதி குழு பரிந்துரை செய்துள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமையவே தீர்வுத் தி;ட்டம் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி குழு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் எவ்வாறான தீர்வுத் திட்டத்தை முன்வைத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் என மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தெரிவித்துள்ளது.
Spread the love