குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச விலங்குகள் தினத்தில் கால் நடைகள் இறந்து காணப்படுவதை கண்டித்து கிளிநொச்சி பளை பிரதேச மக்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில் அறத்திநகர் பகுதியில் பளை பிரதேசசபையினால் குப்பைகள் கொட்டப்படும் இடம் போதுமான பராமரிப்பும், பாதுகாப்புமின்றி காணப்படுகின்றது.
குப்பைகள் கொட்டப்படும் பெருங்கிடங்குகளில் தகரம் மற்றும் பிளாஸ்டிக் பேணிகளில் நீர் தேங்கி சுகாதாத்திற்கு பெரும் சவாலாக இருப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் குழிகளில் தேங்கி நிற்கும் நீரை அருந்தும் கால்நடைகள் இறந்து போகின்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
எனவே இதை கண்டித்து இன்று(04) பளை பிரதேச மக்கள் பிரதேச சபை குப்பை அகற்றும் வாகனத்தை தடுத்து செல்லவிடாமல் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள்.
இதன் போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த பிரதேச சபையின் செயலாளர் 14 நாட்களில் துப்பரவு செய்து தருகின்றோம் என உறுதி அளித்தபின்னர் மக்கள் அங்கிருந்து அகன்று சென்றனா்