குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் அரசமைப்பின் வரம்பிற்கு உட்பட்டது என பிரதமர் மல்கம் டேர்ன்புல் தெரிவித்துள்ளார். சந்தேக நபர்களை குற்றச்சாட்டுகள் எதனையும் சுமத்தாமல் 14 நாட்களிற்கு தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு அதிகாரிகளிற்கு அனுமதியளிக்கும் உத்தேச சட்டமூலம் தொடர்பிலேயே பிரதமர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை நீதிபதியொருவர் வழங்கவேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார். சந்தேகநபர் ஓருவரை 14 நாட்கள் குற்றச்சாட்டுகளை சுமத்தாமல் தடுத்துவைத்திருப்பதற்கான அனுமதியை கடந்தகால அனுபவங்களை முன்வைத்தே வழங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
எங்கள் முக்கிய கரிசனை அவுஸ்திரேலியர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது தொடர்பானதே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.