குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மீள்குடியேற்றத்தின் பின்னா் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்தில் 18 மாணவா்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனா். 75 மாணவா்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனா் அதில் 18 மாணவா்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதோடு,48 மாணவா்கள் நூறு புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். இதன் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக மாணவா்கள் சித்தியடைந்த பாடசாலைகளில் மூன்றாவது நிலையிலும் விகிதாசாரத்தில் முன்னிலையிலும் காணப்படுகிறது.
2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையின் பெற்றோர்களில் பெரும்பாலனவா்கள் வறுமைக்கோட்டிற் கீழ் வாழ்கின்றவா்கள். சித்தியடைந்த எந்த மாணவா்களும் நகர்புறங்களுக்கு தனியார் கல்வி நிலையங்களுக்குச் சென்று தங்களது மேலதிக கல்வி தொடரவில்லை எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் 39 மாணவா்களும், மற்றும் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் 33 மாணவா்களும் சித்தியடைந்துள்ளனா். இ்நத இரு பாடசாலைகளிலும் 200 மேற்பட்ட மாணவா்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கிளி நொச்சி மாவட்டத்தில் 226 மாணவா்கள் சித்தியடைந்துள்ளனா். அதில் கரைச்சி கல்விக் கோட்டத்தில் 163 மாணவா்களும், கண்டாவளையில் 33 மாணவா்களும், பூநகரியில் 20 மாணவா்களும்,பளையில் 10 மாணவா்களும் சித்தியடைந்துள்ளனா்