160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரேஸிலின் ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் கார்லோஸ் நுஸ்மான் ( Carlos Nuzman ) கைது செய்யப்பட்டுள்ளார். ரியோ டி ஜெனய்ரோவில் வைத்து கார்லோஸ் நுஸ்மான் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கார்லோஸ் நுஸ்மானின் கடவுச்சீட்டையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 72 வயதான கார்லோஸ் நுஸ்மான் தாம் எந்தவொரு குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.
Spread the love