புலம்பெயர் சமூகத்தினர் இலங்கையில் ஒற்றையாட்சியினையே விரும்புகின்றனர் என கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். தேர்தல் திருத்தம் மற்றும் புதிய அரசியல் யாப்பு குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பான கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதிகூடிய அதிகாரப்பகிர்வு இடம்பெற வேண்டும் என்பதே புலம்பெயர் சமூகத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது எனவும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அவர்களில் பெரும்பாலானோர் தமக்கு ஆதரவளித்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் சமூகத்தினர் அனைவரும் பிரிவினைவாதிகள் அல்லர் எனவும் ஒருசிலர் மாத்திரமே தனி நாடு வேண்டும் என கூச்சலிடுகின்றனர் எனவும் அவர்கள் கூச்சலிடுவதை தடுத்து நிறுத்த தம்மால் முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.