160
இந்தியாவின் அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான குறித்த ஹெலிகொப்டரில் வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஹெலிகொப்டர் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து விமானப் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Spread the love