Home விளையாட்டுஉலக கோப்பை போட்டிக்கு ஜேர்மனி, இங்கிலாந்து தகுதி

உலக கோப்பை போட்டிக்கு ஜேர்மனி, இங்கிலாந்து தகுதி

by admin

2018ஆம் ஆண்டு  ரஸ்யாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடைபெற்றுவருகின்ற நிலையில் நேற்றையதினம் நடைபெற்ற ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்ட போட்டியில் ஜெர்மனி 3-1 என்ற கணக்கில் வடக்கு அயர்லாந்தை வென்றது.

அதேநேரம் வேறொரு போட்டியில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் சுலோவாக்கியாவை வென்றுள்ளது. இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் முடிவில் ஜெர்மனி 9 ஆட்டத்தில் விளையாடி அனைத்திலும் வென்று 27 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

இங்கிலாந்து 9 ஆட்டத்தில் 7  போட்டியில் வெற்றியும்  2 போட்டியில் சமனிலையும் பெற்று  23 புள்ளிகள் பெற்றுள்ளது.
இதன் மூலம் ஜெர்மனி, இங்கிலாந்து அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More