227
ஜப்பானின் கிழக்கு கடலோர தீவுகளில் ஒன்றான ஹான்சுவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.3 அலகுகளாக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இவாகி நகரின் கிழக்கிலிருந்து 300 கி.மீ. தொலைவில், 77.8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் இல்லை என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
Spread the love