2017ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதங்களை ஒழிக்க பிரசார இயக்கம் மேற்கொண்டுவரும் ஐகான் (International Campaign to Abolish Nuclear Weapons (ICAN) ) என்ற அமைப்புக்கு வழங்கப்படுகிறது. உலகில் உள்ள 101 நாடுகளை சேர்ந்த 468 அமைப்புகள் இணைந்து செயற்படும் இந்த அமைப்பின் தலைமையிடம் சு;விட்சர்லாந்தின் தலைநகரான ஜெனிவாவில் உள்ளது.
கடந்த பத்து வருடங்களாக ஆணுஆயுத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், அணுஆயுத சோதனை நடத்துவதற்கும் ஐகான் அமைப்பு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு அணுஆயுதங்களை தடை செய்வதற்கான தொடர் முயற்சியில் ஈடுபட்டுவரும் ஐகான் அமைப்பு அமெரிக்கா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளின் அணு ஆயுத உற்பத்தியை குறைத்ததில் முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது,
அணுஆயுதங்களை கொண்டு போர் பதற்றத்தை அமெரிக்காவும், வடகொரியாவும் உருவாக்கி வரும் நிலையில் அணுஆயுதத்திற்கு எதிராக போராடி வரும் ஐகான் அமைப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.