குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொன்சவேர்ட்டிவ் கட்சியின் அதிருப்தியடைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களால் தான் பதவியிலிருந்து அகற்றப்படலாம் என வெளியாகியுள்ள தகவல்களை நிராகரித்துள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே , பி;ரதமர் என்ற வகையில் தொடர்ந்தும் அமைதியான தலைமைத்துவத்தை வழங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார். தனது அமைச்சரவையின் முழுமையான ஆதரவு தனக்குள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொன்சவேர்ட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவர் கிரான்ட் சப் கட்சியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மே பதவி விலகவேண்டும் என விரும்புகின்றனர் என தெரிவித்துள்ள நிலையிலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டிற்கு தற்போது அமைதியான தலைமைத்துவமே அவசியமாகவுள்ளது அதனை நான் அமைச்சரவையின் முழு ஆதரவுடன் வழங்குகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பில் இத்தாலியில் ஆற்றிய உரையை மேலும் விரிவாக்கி அடுத்த வாரம் மற்றுமொரு உரையை நிகழ்த்தவுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எரிபொருள் விலையை கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்