175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மக்களின் அதிருப்திக்கு உள்ளான காவல் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சுமார் 60 காவல் நிலையப் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்ற மற்றும் சேவை குறித்து மக்கள் அதிருப்தி வெளியிட்ட அதிகாரிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இந்த இடமாற்ற உத்தரவுகள் குறித்து தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love