கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெங்களூரில் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஸ் பிரித்தானியாவின் முக்கிய விருதுகளில் ஒன்றான அன்னா பொலிகோவஸ்கயா(Anna Politkovskaya) விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
‘லங்கேஷ் பத்திரிக்கா’ என்ற இதழை நடத்தி வந்த கவுரி லங்கேஷ் சில நாட்களுக்கு முன் கொல்லப்பட்டிருந்தார். லண்டனில் இயங்கும் அமைப்பான ரோ இன் வோர்( Raw in war) என்ற தனியார் தொண்டு நிறுவனமே கவுரி லங்கேஷிற்கு இந்த விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது. பெரும்பாலும் இந்த விருது பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைக்காக போராடும் பத்திரிக்கையாளர்கள், போராளிகளுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கவரி லங்கே{க்கு வழங்கப்படும் இந்த விருது பாகிஸ்தான் போராளி குலாலாய் இஸ்மாயில் உடன் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது ரஷ்யாவில் 2006ல் கொல்லப்பட்ட பெண் பத்திரிகையாளர், அன்னா பொலிகோவஸ்கயா நினைவாக வருடாவருடம் வழங்கப்படுகிறது.