மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
களுவாஞ்சிகுடி – எருவில் பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள காணியொன்றில் உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளதனை தொடர்ந்து இது தொடர்பில் பிரதேசத்தில் இருந்தவர்களினால் காவல்துறையின் அவசர நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர் சடலத்தினை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.