சூடான் மீதான 20 ஆண்டுகால வர்த்தக தடையை நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. தீவிரவாதத்துக்கு உதவுவதாக தெரிவித்து சூடான் மீது அமெரிக்கா 20 ஆண்டுகள் வர்த்தக தடை விதித்திருந்தது. இந்த நிலையில் சூடான் மீதான தடை நீக்க முடிவுக்கு செய்துள்ளதாக தற்போது அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் சூடான் மீது விதிக்கப்பட்ட வர்த்தக தடையை நீக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முடிவை சூடான் தலைவர்களும், மக்களும் வரவேற்கிறோம் என சூடான் வெளியுறவு அமைச்சர் சினுவா தெரிவித்துள்ளார். வெளிப்படையான பேச்சு வார்த்தைகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகள் களையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் சர்வதேச அளவில் பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்தி பயங்கரவாதம், மனித கடத்தல் ஆகியவற்றை எதிர்த்து போராடுவோம் எனவும் அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமான உறவு வைத்து கொள்ள சூடான் ஆவலாக உள்ளது எனவும் தெரிவித்துள்ள சூடான் தீவிரவாதத்துக்கு உதவும் நாடுகளின் பட்டியலிலிருந்து சூடானை அமெரிக்கா நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது