இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் சுவிட்ஸர்லாந்தில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சுவிற்சலாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நேற்றையதினம் 38 வயதான குறித்த புகலிடக் கோரிக்கையாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் இன்று இரண்டு புகலிடக்கோரிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு குடியிருப்பு ஒன்றிற்கு சென்றுள்ள நிலையில் அங்கு வீட்டிற்குள் இருந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் கத்திகளுடன் வீட்டிலிருந்து வெளியே வந்து காவல்துறையினர் அழைத்துச்சென்ற புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது அவர் தாக்குதல் நடத்த முயன்றுள்ளார்.
இதனையடுத்து நிலைமையை உணர்ந்து கொண்ட காவல்துறை அதிகாரி தாக்குலாளி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் அந்த இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச்சேர்ந்த சுகு என அழைக்கப்படும் சுப்பிரமணியம் கரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கும் தமிழ் இளைஞரகள் இருவருக்கும் இடையே ஏற்படட கைகலப்பினை தொடர்ந்து, ஏனைய இரு தமிழ் இளைஞர்களும் காவல்துறையினரிடம் சென்று, அவர்களின் துணையுடன் மீண்டும் வந்த போது கோப மிகுதியில் இருந்த இவர் கத்தியுடன் ஓடி சென்ற போது, தற்பாதுகாப்பு கருதி காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில், அவர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது