சீன எல்லையில் எதற்கும் தயார் நிலையில் இருக்குமாறு இந்தியா தமது இராணுவத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளது. டோக்லாம் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் பேச்சுவார்த்தை மூலம் தவிர்க்கப்பட்டாலும் சீன இராணுவத்தினர் போருக்கு தயார்படுத்தப் பட்டிருப்பதாகவும் இந்தியா கூறியுள்ளது.
டோக்லாம் முச்சந்திப்பு பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் சீன துருப்புகள் 500 பேர் நிலை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் குளிர்காலத்தையொட்டி, 4 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள சீன எல்லையில், இந்திய படைகள் அதி உச்ச தயார் நிலையில் இருக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்ட உத்தரவு பிறப்பிக்கும் வரையில் இந்த உச்சக்கட்ட தயார் நிலையை தொடர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக நியூஸ் 7 தொலைக்காட்சி குறிப்பிடுகின்றது.
இந்திய– சீன எல்லைக்கு அப்பாலான பகுதியில் கூட துருப்புகளை குறைக்க முடியாது என இந்தியா தீர்மானித்துள்ளது. இவற்றுடன், ஆயுதங்கள், தளவாடங்கள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கவும் இந்தியா தனது இராணுவத்திற்கு ஆணை பிறப்பித்துள்ளது.