குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டை தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழக்குத் தொடரப்படும் என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஹம்பாந்தோட்டையில் கூட்டு எதிர்க்கட்சியினர் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியன வெளிநாடுகளுக்கு வழங்கப்படக்கூடாது எனத் தெரிவித்தும் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களின் சார்பிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.