பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை தலைமை அதிகாரியான கிருஷ்ணகுமாருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.
பெங்களூரு சிறையில் கைதிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியதில் கைதிகள் தாக்கப்பட்டமை உறுதியானதை தொடர்ந்தே இவ்வாறு அழைப்பாணை அனுக்கப்பட்டுள்ளது.
2 கோடி ரூபா லஞ்சம் பெற்றுக்கொண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் சிறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபாக்கு மனு வழங்கப்பட்டது.
அத்துடன் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த 32 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டதுடன் அவர்கள் நொண்டி, நொண்டி சிறைக்குள் நடந்து சென்ற காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியிருந்த நிலையில் கைதிகள் தாக்கப்பட்டதாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது. இதேபோல், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் சிறைத்துறையிடம் அறிக்கை கேட்டது அத்துடன் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டன.
இந்தநிலையில் கைதிகள் தாக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டதனை தொடர்நது அழை;பபாணை அனுப்பப்பட்டுள்ளது