குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனாவுடனான உறவுகள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் சிரேஸ்ட படையதிகாரி ரியர் அட்மிரால டொனால்ட் டி. கப்ரிஸன் (Donald D. Gabrielson ) இதனைத் தெரிவித்துள்ளார். சீனா வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதில்லை எனவும் எனவே, சீனாவுடன் தொடர்பு பேணும் நாடுகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் சீன பிரசன்னம் தொடர்பில் அமெரிக்கா கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சீனாவுடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியமுண்டு எனவும் அதனை எதிர்க்கவில்லை என்ற போதிலும், சீனாவின் நோக்கங்களை கண்டறிந்து அதன் அடிப்படையில் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.