குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்ட மா அதிபர் பாராளுமன்றை பிழையாக வழிநடத்துகின்றார் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். உள்ளுராட்சி மன்ற திருத்தச் சட்டம் தொடர்பில் சட்ட மா அதிபர் தனது கருத்து ஊடாக பாராளுமன்றை பிழையாக வழிநடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்திற்கு அமைவாகவே சட்டங்கள் பாராளுமன்றில் அ நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டம் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றை பிழையாக வழிநடத்திய குற்றச்சாட்டை சட்ட மா அதிபர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.