குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்தியாவிற்கு மத்தள விமானநிலையத்தை வழங்குவது குறித்து இன்னமும் இறுதி முடிவெடுக்கவில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிவில் விமானசேவைகள் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு மத்தள விமானநிலையத்தை வழங்குவது குறித்த இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை எனவும் அவ்வாறு தீர்மானிக்கப்பட்டாலும் கூட அதன் பாதுகாப்பு தொடர்பான அதிகாரம் இலங்கை விமானப்படையிடமே தொடர்ந்தும் காணப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
மேலும் மத்தள விமானநிலையத்தை விற்பனை செய்யும் எண்ணம் எதுவும் தமக்கு கிடையாது எனவும் அதை குத்தகைக்கே வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளர்h. இது தொடர்பில் வெளிநாட்டு பத்திரிகையில் விளம்பரப்படுத்தி முதலீடு செய்வதற்கு முன்வருமாறு கோரியதாகவும் விலைமனு கோரலும் மேற்கொள்ளப்பட்டதாகவும் எனினும் மத்தளை விமானநிலையத்தில் முதலீடு செய்ய எவரும் வரவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
எனினும் இந்தியா மாத்திரமே இதற்கு முன்வந்திருந்த போதிலும் இந்திய நிறுவனத்திடம் தாம் விரிவான யோசனைத்திடடத்தை கோரியதாகவும் இதுவரை இந்தியா யோசனை திட்டத்தை முன்வைத்திருக்கவில்லை எனவும் அதனை செய்யாமல் குத்தகைக்கு வழங்கமுடியாது எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்