குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆபிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவும் முனைப்புக்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு சிரத்தை காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் குடியேற்ற முகவர் நிறுவனம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. சப்ரதா (Sabratha) வில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆபிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இவ்வாறு உதவிகள் வழங்கப்பட உள்ளன.
கர்ப்பிணிகள், பிறந்த சிசுக்கள், ஆதரவற்ற சிறுவர் சிறுமியர் என சுமார் நான்காயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் நிர்க்கதியான நிலையில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு தரப்புக்களுக்கு இடையிலான மோதல்களினால் புகலிடக் கோரிக்கையாளர்கள் இடையில் சிக்கியுள்ளனர். பெரும் எண்ணிக்கையிலான ஆபிரிக்க அகதிகள், மத்திய தரைக் கடல் வழியாக ஐரோப்பா நோக்கி பயணிக்கும் நோக்கில் இந்தப் பகுதியை சென்றடைகின்றனர்.