குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் முன்னாள் செயலாளர் இரேசா சில்வாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
நிதிச் சலவை தொடர்பிலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இன்று காலை விமான நிலையத்தில் வைத்து இரேசா கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டு அவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட் நிலையில் நீதிமன்றம் பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிநாடொன்றிலிருந்து நாடு திரும்பிய போது இரேசாவை விமான நிலைய குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமல் ராஜபக்ஸவின் முன்னாள் செயலாளர் விமான நிலையத்தில் வைத்து கைது
Oct 10, 2017 @ 04:12
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் முன்னாள் செயலாளர் இரேசா சில்வா, விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நிதிச் சலவை தொடர்பிலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாடொன்றிலிருந்து நாடு திரும்பிய போது இரேசாவை விமான நிலைய குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இரேசாவை கைது செய்வதற்கு இன்டர் போல் ஊடாக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.