189
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மறவன்புலோ கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை மிதிவெடி வெடித்ததில் வளப்பு மாடு ஒன்றின் கால் சிதைவடைந்துள்ளது.
குறித்த பகுதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை நகுலராசா என்பவரின் மாடே தனது காலை இழந்துள்ளது. வீட்டின் பின்புறமாக இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மறவன்புலோ கிராமம் 1999ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுவரை உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட பகுதியாகும். 2010ஆம் ஆண்டின் பின்னர் மக்கள் மீளக்குடியமர்ந்த வேளை அரச சார்பற்ற மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் கண்ணிவெடிகளை அகற்றும் பணியை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love