199
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை அரசாங்கம் உருவாக்கிவரும் புதிய அரசமைப்;பு தொடர்பான இடைக்கால குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். இன்று இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக விமல்வீரவன்ச விடுத்த வேண்டுகோளிற்கு ஏற்பவே இன்று இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவரது கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பின்போது இடைக்காலஅறிக்கை மற்றும் காணமல்போதலை தடுப்பது குறித்த சட்டமூலம் குறித்து ஆராயப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன
Spread the love