சசிகலாவுக்கு பரோல் இன்றுடன் முடிவடைய இருப்பதால் கடைசியாக 5-வது நாளாக இன்று வைத்தியசாலை சென்று அவரது கணவர் ம.நடராஜனை பார்ப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ம.நடராஜனுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை பார்ப்பதற்காக, பெங்களூர் சிறையில் இருந்து 5 நாள் சிறைவிடுப்பில் வந்துள்ள சசிகலா சென்னையில் தங்கியிருக்கிறார். தொடர்ந்து சிகிச்சையில் உள்ள கணவர் ம.நடராஜனை தினசரி சந்தித்து, அவருடைய உடல்நிலையையும் வைத்தியர்களிடம் கேட்டறிந்து வருகிறார்.
இந்தநிலையில் பரோல் இன்றுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவமதக தெரிவிக்கப்படுகின்றது.