Home இலங்கைஅச்சுவேலியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு :

அச்சுவேலியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.அச்சுவேலி பகுதியில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.  நாவற்குழி பகுதியை சேர்ந்த சஜீவன் (வயது 20) எனும் இளைஞரே உயிரிழந்தவராவார்.

அச்சுவேலி தெற்கு , நெருப்பு மூட்டி பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்று உள்ளது. யாழ்.- பருத்தித்துறை பிரதான வீதியில் வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற போது, மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக நடப்பட்டு இருந்த மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில்   இளைஞர் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கபட்டு அச்சுவேலி வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது ,   செல்லும் வழியில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More