ஈழ கலைஞர்களின் உழைப்பில் உருவான உம்மாண்டி திரைப்படம் எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் , யாழ்.ராஜா திரையரங்கில் வெளியிடப்பட உள்ளதாக படத்தின் இயக்குனர் மதிசுதா தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
ஈழ சினிமா ஊடாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கதைகளை வெளிக்கொணர முடியும். ஈழ சினிமா ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஆயுதம் அதனை நாம் பயன்படுத்தப்படுத்தும் விதத்தில் பயன்படுத்த வேண்டும்.
எமது கலாச்சரம் வாழ்வியல் மொழிகளை சினிமாக்கள் ஊடாக கடத்தலாம். அந்த வகையில் யாழ்.நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் படமாக்கப்பட்டு , ஈழ கலைஞர்களின் உழைப்பில் உம்மாண்டி திரைப்படத்தை உருவாக்கி உள்ளோம்.
வழமையாக பார்த்த விடயங்களை உள்ளடக்கிய திரில்லர் படமாக ஒரு மணித்தியாலம் 20 நிமிட முழு நீள திரைப்படமாக உருவாகியுள்ளது. என தெரிவித்தார்.