162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாரிய விண் கல்லொன்று பூமிக்கு அருகாமையில் கடந்து செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பூமிக்கு 26000 மைல்கள் தொலைவில் இந்த விண் கல் கடந்து செல்ல உள்ளது. இந்த விண்கல்லினால் பூமிக்கு ஆபத்து கிடையாது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 50 முதல் 100 அடி உயரமான இந்த விண் கல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக கண்டு பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விண் கல்லிற்கு 2012 TC4 என பெயரிடப்பட்டுள்ளது.
Spread the love