குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகின் முதனிலை கணனி வைரஸ் பாதுகாப்பு மென்பொருட்களில் ஒன்றான கஸ்பர்ஸ்க்கை மென்பொருளைப் பயன்படுத்தி ரஸ்யா, சைபர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலிய உளவுப் பிரிவினர் இது பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளனர்.
ரஸ்ய அரசாங்கத்தின் ஹக்கர்கள் இவ்வாறு கணனிகளில் ஊடுறுவி தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் சுமார் 400 மில்லியன் பயனர்கள் கஸ்பர்ஸ்க்கை மென்பொருளைப் பயன்படுத்தி வருகின்றார்கள் என்புது குறிப்பிடத்தக்கது.
கஸ்பர்ஸ்க்கை ஊடாக உளவு பார்ப்பதாக இஸ்ரேலிய உளவுப் பிரிவினர் அமெரிக்காவிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தனர். எனினும், கடந்த மாதத்திலேயே அமெரிக்க அரசாங்க நிறுவனங்களிலிருந்து இந்த மென்பொருள் அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.