177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்திற்கான கட்டளைத் தளபதி அட்மிரால் ஸ்கொட் சிப்ட் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் வெள்ளம் ஏற்பட்ட அமெரிக்கப் படையினர் உதவிகளை வழங்கியிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடற்கொள்ளை உள்ளிட்ட பல்வேறு ஆபத்துக்களுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love