குற்றங்களுக்கான நியாயத்தை விரைவாகவும், வினைத்திறனாகவும் வழங்குவதற்கான விதந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டது.
சட்டபூர்வ செயற்பாடுகள் (ஊழல் எதிர்ப்பு) மற்றும் ஊடக செயற்பாடுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வை செயற்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேராவினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பை வெற்றிகரமாக பேணுவதாயின் மிகவும் சரியான, நியாயமான நீதிமன்ற தீர்ப்புகள் தாமதமின்றி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
சமகால சமூக தேவைக்கேற்றவாறு குறித்த நிறுவனங்கள் செயற்படக்கூடிய சூழலை ஏற்படுத்துவதன் மூலம் செயற்திறனை இற்றைப்படுத்த வேண்டும் என்பதனால் அதற்கான தேவைகளை இனங்கண்டு பொருத்தமான விதந்துரைகளை சமர்ப்பிப்பது அறிக்கையின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது