குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகள் கவலையளிக்கும் விதத்திலான முட்டுக்கட்டையை சந்தித்துள்ளதாக ஐரோப்பிய ஓன்றியபிரதிநிதி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஓன்றியத்தின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் மைக்கல் பார்னியர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைகள் கவலையளிக்கும் விதத்திலான முட்டுக்கட்டை நிலையை சந்தித்துள்ளன எனினும் டிசம்பரிற்கு முன்னர் முக்கிய முன்னேற்றத்தை காணலாம் என்பது குறித்து நம்பிக்கைகொண்டுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போதியளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐரோப்பிய தலைவர்களின் உச்சிமாநாட்டில் நான் பரிந்துரை செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.