Home உலகம் பிரெக்சிற் குறித்து மீண்டும் வாக்கெடுப்பு இடம்பெற்றால் பிலிப் ஹமொன்ட் வாக்களிப்பாரா?

பிரெக்சிற் குறித்து மீண்டும் வாக்கெடுப்பு இடம்பெற்றால் பிலிப் ஹமொன்ட் வாக்களிப்பாரா?

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியா  ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்து மீண்டும் ஓரு சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெற்றால் அதற்கு ஆதரவாக வாக்களிப்பாரா என்பது குறித்து பிரித்தானியாவின் நிதியமைச்சர் பிலிப் ஹமொன்ட் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார். நான் பிரித்தானியா   ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த  பேச்சுவார்த்தைகளில் பிரித்தானியாவிற்கு சாதகமான உடன்படிக்கை எட்டப்படுவதற்காக பாடுபடுவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மீண்டுமொரு முறை சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெற்றால் எவ்வாறு வாக்களிப்பார் என்பது குறித்து  அவர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார். சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெற்ற போது  அதில் நான் எவ்வாறு வாக்களித்தேன் என்பது உங்களிற்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.2016 இல் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில்   பிரித்தானியா   ஐரோப்பிய ஓன்றியத்துடன் இணைந்திருக்கவேண்டும் என்பதற்கு ஆதரவாக நிதியமைச்சர் வாக்களித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More