குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டலோனிய விவகாரத்தில் ஐரோப்பிய ஓன்றியம் தலையிடுவது மேலும் குழப்பத்தை அதிகரிக்கும் என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர்ஜீன்-க்ளூட் ஜங்கர் ( Jean-Claude Juncker ) தெரிவித்துள்ளார். ஸ்பெயின் பிரதமரிடம் கட்டலோனிய விவகாரத்திற்கு தீர்வை காணும்போது தான் வழங்கிய ஆலோசனை பின்பற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்டலோனியாவில் பாரிய குழப்பநிலை ஏற்படாதவண்ணம் நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் ஸ்பெயின் பிரதமரை கேட்டிருந்தேன் ஆனால் நான் ஆலோசனை வழங்கிய பல விடயங்களை அவர்கள் செவிமடுக்கவில்லை என ஜங்கர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா ஐக்கியமாக விளங்குவதையே நான் விரும்புகின்றேன் ஆனால் கட்டலோனிய விவகாரத்தில் எனது கைகள் கட்டப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகளிலும் இவ்வாறான பிளவுகள் ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு எனவும் எனவே இதற்கு ஆதரவளிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்பெய்ன் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும், ஜனநாயகம் தொடர்பில் சவால் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்பெய்னிடமிருந்து சுதந்திரம் பெற்றுக்கொள்ள வேண்டுமெனக் கோரி கட்டலோனியா சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.