295
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கடன்களை பிரித்தானியா செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிக் கொண்டதன் பின்னர் கொடுக்க வேண்டியவற்றை செலுத்தாது, அதற்கு முன்னதாகவே செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜீன்-க்ளூட் ஜங்கர் ( Jean-Claude Juncker ) இதனைத் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் புதிய புதிய பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் பிரச்சினைகள் காரணமாகவே எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் பிரிடெக்ஸிற்கு நீண்ட காலம் தேவைப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love