168
இனங்களுகை்கிடைய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மதகுருமார்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபா் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளாா்
சமாதான வாழ்விற்கான சர்வமதங்களின் நல்லிணக்கம் எனும் தொனிப்பொருளில் கரிதாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்கொண்டு உரையாற்றும் போதே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா். அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில்
நாங்கள் ஒவ்வொரும் முதலில் நல்ல மனிதர்களாக சக மனிதர்களை நேசிக்கின்றவர்களாக இருக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து மதங்களும், மக்களுக்கான நல்ல விடயங்களையே போதிக்கின்றன. மதக்குருமார்களும் அவற்றையே போதிக்கின்றாா்கள் என்றே நம்புகின்றேன். பின்பற்றுகின்றவா்களும் அதனை பின்பற்றினால் எங்களுடைய நாட்டில் பிரச்சினைகளும் குறைவாகவே இருக்கும், ஒரு தனி மனிதனுடைய வாழ்வில் அமைதியின்மை காணப்படுமானால் அது அவனுடைய குடும்பத்திலும் அந்தச் சூழலிலும் அமைதியின்மையை ஏற்படுத்தும். நாங்கள் எங்களுடை மதங்களின் கொள்கைகளை பின்பற்றுகின்ற அதே வேளை ஏனைய மதங்களையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் மதிப்பு கொடுக்க வேண்டும் அவ்வாறு செயற்படுகின்ற போதே எங்கள் மத்தியில் பன்மைத்துவத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தலாம்.
இனங்களுக்கிடைய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் மதகுருமார்ளுக்கு முக்கியமான பங்கிருக்கின்றது. மக்கள் தங்களின் சமயத்தைச் சேர்ந்த மதகுருமார்களுக்கு மதிப்பிளிக்கின்றவா்களாக உள்ளனா். எனவே மக்கள் மத்தியில் ஒற்றுமை, அன்பு ,காரூன்யம் போன்ற பண்புகளை வளர்த்தெடுத்து இனங்களுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்துவற்கு மதகுருமார்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தாா்.
இந்த நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகைதந்திருந்த சர்வமத தலைவா்கள் மற்றும் சமூக செயற்பாட்டாள்ரகள் ஆகியோா் கலந்துகொண்டனா்.
Spread the love