Home இலங்கைபோராட்டங்கள் நடத்தினாலும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள்

போராட்டங்கள் நடத்தினாலும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அரசியல் லாபங்களை கருத்திற் கொண்டு வடக்கில் எவ்வாறான போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். பியகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் போராட்டமொன்றை முன்னெடுத்து வருவதாகவும் இந்தப் போராட்டங்களினால் வடக்கு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் அவர்  குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் லாப நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிச் சந்தேக நபர்களை அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்தினாலும் அவர்கள் அரசியல் கைதிகள் அல்லர் எனவும்  பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More