குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்த விவகாரத்தில் தான் மிதமான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கின்றார் என கொன்சவேர்ட்டிவ் கட்சிக்குள் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளிற்கு முடிவை காணும் விதத்தில் பிரித்தானியாவின் நிதியமைச்சர் பிலிப் ஹமொன்ட் கருத்து தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த விவகாரத்தில் கொன்சவேர்ட்டிவ் கட்சிக்குள் காணப்படும் கருத்துவேறுபாடுகளிற்கு முடிவை காண வேண்டிய தருணம் இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் ஆழமான ஆர்வம் காணப்படுவது எனக்கு தெரியும் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுவதும் எனக்கு தெரியும் இந்த விடயத்தில் நாங்கள் அனைவரும் ஓரு இலக்கை நோக்கியே செல்கின்றோம் ஓரே நிகழ்ச்சிநிரலையே கொண்டிருக்கின்றோம் என பிலிப் ஹமொன்ட் தெரிவித்துள்ளார். எதிரிகள் இதனை எதிர்ப்பவர்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு மறுப்பக்கத்தில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளனர். ஐரோப்பிய ஓன்றியத்தையே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.