165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீன ஆளும் கட்சியின் யாப்பில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீனால் தற்போது கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போதைய சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் ( Xi Jinping ) ) இன் அரசியல் கொள்கைகள் யாப்பில் உள்ளடக்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெறும் கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. கட்சியின் யாப்பு விதிகளில் மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் எவ்வாறான மாற்றங்கள் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love