குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையிலான ஓர் பின்னணியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கில் விவசாயிகளின் கடன் சுமையை குறைப்பதற்கு அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையத்தை நேற்றையதினம் திறந்து வைத்து உரையாற்றும் போது அவா் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் நாட்டின் உணவு உற்பத்தி ஐம்பது வீதத்தினால் குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால் மக்களின் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.