இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூர் நகரில் கடந்த 115 ஆண்டுகளுக்குப் பின்னர் கனமழை பெய்துள்ளதாக அந்த மாநிலத்தின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிகரகாரம்1,615.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேவேளை வடகிழக்கு பருவமழையின் போது மேலும் மழைப் பொழிவு அதிகமாகலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான மழை காரணமாக பெங்களூர் நகர் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. நகரின் வீதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
இந்த வெள்ள அனர்த்தம் காரணமாக இடிபாடுகளுக்குள் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளதாக இந்திய தொலைக்காட்சி ஒன்று குறிப்பிடுகின்றது. மழைநீரில் வாகனங்கள் தத்தளித்து வரும் காட்சிகளை பெங்களூர் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றன. இதேவேளை மேலும் இரு நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.