சோமாலியாவின் தலைநகரான மொகதி{வின் பிரதான பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 230 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதியில் உள்ள ஹோட்டலின் வாசலில், வெடிபொருட்களோடு வந்த ஒரு பாரவூர்தியை வெடிக்க வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை நடத்தியது யார் என தெரியவரவில்லை என்கின்ற போதிலும் அந்நாட்டில் அரசுக்கு எதிராக போராடிவரும், அல்-ஷபாப் இயக்கத்தின் நடவடிக்கையாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. அல்-ஷபாப் குழு 2007-ல் கிளர்ச்சியை ஆரம்பித்ததில் இருந்து சோமலியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் இதுவே மோசமான தாக்குதலாக கருதப்படுகின்றது.
இந்தநிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி முகம்மது அப்துல்லாஹ் ஃபார்மஜோ முகம்மது அறிவித்துள்ளார்.