குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காலணித்துவ ஆட்சியாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். காலணித்துவ ஆட்சியாளர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையினால் எதிர்காலத்தில் சிங்கள சமூகத்திற்குள் பாரியளவில் கலகங்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். முடிந்தளவு சீக்கிரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கங்கள் முறியடிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.அவ்வாறு செய்யத் தவறினால் காலணித்துவ ஆட்சியாளர்கள் நாட்டை கைப்பற்றக்கூடிய சாத்தியம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.